தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
தீவிரமடையும் பருவமழை ! அடுத்த 6 நாட்களுக்குக்

தீவிரமடையும் பருவமழை ! அடுத்த 6 நாட்களுக்குக் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்

வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் 2 நாட்களுக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகிஉள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் முழுவதும் மழை பொழிவானது நவம்பர் 5ஆம் தேதிவரை நீடிக்கும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் புதுவை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதாகவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் ஆறாம் தேதிவரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. முன்னதாகவே தமிழகத்திற்கு ஆர்.எச் அலட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ஆரஞ்சு பழத்தை மஞ்சள் அலர்டாகக் குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக அடர்ந்த மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும் என்பதாகத் தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

4ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

5ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

6ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.